search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள்"

    திருவிடந்தை ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள் ஆலயத்தில் சிற்ப அதிசயங்கள் ஏராளமாக உள்ளன. கோவில் முழுக்க தூண்களில் விதவிதமான சிற்பங்களை பார்க்கலாம்.
    திருவிடந்தை ஆலயத்தில் சிற்ப அதிசயங்கள் ஏராளமாக உள்ளன. கோவில் முழுக்க தூண்களில் விதவிதமான சிற்பங்களை பார்க்கலாம். ஒவ்வொரு சிற்பமும் ஒவ்வொரு கதையை பின்னணியாக கொண்டுள்ளது.

    கருவறையில் மூலவர் நித்தய கல்யாணப்பெருமாளின் நின்ற கோலம் பார்ப்பவர்களை அசரவைக்கிறது. கருவறையில் வராகர் கிழக்கு திசையை நோக்கியபடி நிற்கிறார். அவரது உயரம் சுமார் 6 அடி உயரத்துக்கு பிரமாண்டமாக உள்ளது.

    வராகர் இடதுகாலை மடித்து அதை ஆதிசேஷன் தலைமீது ஊன்றியபடி உள்ளார். அவரது வலது கால்மட்டும் தான் தரையில் ஊன்றியபடி இருக்கிறது. மடிக்கப்பட்ட இடது கால் தொடைமீது லட்சுமியை அமர்த்தி இடுப்பில் தாங்கி பிடித்தப்படி உள்ளார். வராகரின் வலது கை லட்சுமியின் கால்களை லாவகமாக பிடித்தப்படி உள்ளது.

    வராகர் தனது திருமுகத்தை லட்சுமியை பார்த்தப்படி உள்ளார். இந்த அருட்கோலம் 108 திவ்ய தேசங்களில் எங்கும் இல்லாதது. இதனால் அந்த கல் சிலையை பக்தர்கள் ஒவ்வொருவரும் அச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்

    வராகரின் இடது காலை ஏந்தியபடி இருக்கும் ஆதிசேஷன் தனது மனைவியுடன் இருக்கிறார். இதுவும் வேறு எந்த தளத்திலும் பார்க்க முடியாத சிறப்பு அம்சமாகும்.

    மூலவர் தாயாராக அமர்ந்து இருக்கும் லட்சுமிக்கு அகிலவல்லி நாச்சியார் என்று பெயர் ஆகும். அனைத்து சக்திகளையும் கொண்டதாக தாயார் கருதப்படுவது மற்றொரு சிறப்பு அம்சமாகும்.
    திருவிடந்தை பெருமாளை தரிசனம் செய்தால் திருப்பதி பெருமாளை தரிசனம் செய்வதற்குச் சமம் என்று கூறலாம். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    திருமங்கையாழ்வார், ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாளை பத்துப் பாடல்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். அது மட்டுமல்ல, திருப்பதி திருமலைக்கு ஆழ்வார் சென்றபோது கூட, அவருக்கு இந்த திருவிடந்தை பெருமாளின் நினைவு தான்.

    திருப்பதி குளக்கரையில், அருள்பாலிக்கும் வராகரைப் பார்த்ததும், ஏத்துவார்தம் மனத்துளான் இடவெந்தை மேவிய எம்பிரான் என்று இந்தப் பெருமாள் நினைவாகத்தான் பாடினார் திருமங்கையார். அதனால், திருவிடந்தை பெருமாளை தரிசனம் செய்தால் திருப்பதி பெருமாளை தரிசனம் செய்வதற்குச் சமம் என்று கூறலாம்.

    108 திருப்பதிகளில் பெருமாள் வராகமூர்த்தியாக தம்பதி சமேதராக ஆதிசேஷன், பெருமாள் திருவடியைத் தாங்கி தரிசனம் தரும் திருப்பதியும் இது மட்டும் தான். உற்சவர் பெருமாளுக்கும், தாயாருக்கும் தாடையில் திருஷ்டிப் பொட்டு இயற்கையாகவே அமைந்துள்ளதால் அவர்களை வணங்கினால் இதுநாள் வரை உங்களுக்கு ஏற்பட்ட திருஷ்டிகளும் பறந்துவிடும்.

    தினசரி காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் திறந்து இருக்கும்.
    ×